Friday 25 July 2014

வேட்டி-ஜல்லிக்கட்டு

வேட்டி கட்ட தடை என்றதும் பொங்கிய முற்போக்குகளே.. சந்தோசம்.. அதே சமயம், ஜல்லிக்கட்டை தடை செய்தபோது என்ன செய்தீர்கள்..? ரேக்ளா, ஜல்லிக்கட்டு இந்த மண்ணின் கலாசாரம் இல்லையா? புறத்திணைகளுள் ஒன்றாக கடத்தப்படும் பசுக்களை மீட்பதை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன; அப்படி மீட்டவர்களுக்கு வீரக்கல் எடுத்து கொண்டாடியது தேசம் முழுக்க நடந்துள்ளது. எத்தனை பேர் பசுக்கடத்தலை தடுத்து கலாசாரத்தை காப்பாற்றினீர்கள்?? எத்தனை பேர் உங்கள் இல்ல கல்யாணங்களில் கோட் சூட் போடாமல் இருந்தீர்கள், பப்பே உணவு போடாமல் நீங்களே பரிமாரிணீர்கள்? குறைந்தபட்சம் பப்பே விருந்தில் கலந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? கிளப்புகள், பப்புகள் நம்ம கலாசாராமா? சரி, எப்படியோ குறைந்தபட்சம் வேட்டிக்காவது அரசியல்வாதிகள் குரல் கொடுப்பது மகிழ்ச்சி..

நமது டிராப்பிக்கல் கிளைமேட் கு வேட்டிதான் சரியா இருக்கும். வேட்டி என்றால் கைத்தறி வேட்டியை பயன்படுத்துவதே சிறப்பு. அதற்கு தேவைப்படும் மறைநீர் (Virtual water) வெறும் முப்பதே லிட்டர். மொட மொட வென இருக்கும் பிராண்டட் வேட்டிகள் மோசமானவை. இயற்கை ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் வருவார்கள். வருஷத்தில் ஒரு நாள், ஐநூறு கிலோமீட்டர் காரில் வந்து, நாலு செடியை நெட்டு நாலு பிளாஸ்டிக் பேப்பரை பொறுக்குவார்கள் (போட்டோ எடுக்க). அதற்கு அவர்கள் பிரத்யேகமாக ஜீன்ஸ் டீ ஷர்ட் வாங்கி போட்டு வருவார்கள்.

"அடேய்! ஒரு ஜீன்ஸ் தயாரிக்க 4,000 லிட்டர் தண்ணீ வெஷமாகுது டா.. ஒரு டீ ஷர்ட் தயாரிக்க 500 லிட்டர் தண்ணீ வெஷமாகுதுடா.. நிலத்தடி நீர், விவசாய பொருட்கள், மண், மனிதர்கள், நீர்-நில உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கும் டா.. கறக்கறது காப்படி; ஒதைக்கறது பல்லுப்போவ னு சொல்ற மாதிரி இருக்குது.. உங்க சேவையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம், ஓடுங்கடா" என்று விரட்ட தோணும்.

No comments:

Post a Comment