Friday 25 July 2014

தைராய்ட் கம்ளைன்ட்

போன மாசம் டாக்டர பாத்தப்ப, "உங்களுக்கு தைராய்ட் கம்ளைன்ட் வந்திருச்சு.. இனிமே நீங்க வாழ்க்க முழுக்க தைராய்ட் மாத்தர சாப்படனும்.." னு சொல்லிருக்காரு.. ஆனா, அவர் தந்த தைராய்ட் மாத்தர சாப்படாம நாட்டு மாட்டு அர்க், நாட்டு மாட்டு மோர், சூரிய வெளிச்சம், மலை காய்கறி தவிர்த்து நம்ம நாட்டு காய்கறி னு ஒரு மாசம் கடபிடிச்சு திரும்ப போய் செக் பண்ணுனா உங்களுக்கு சரியா போச்சு னு சொல்றார்..! என்னங்க னு கேட்டா "முன்னலாம் நாலு பாய்ன்ட் இருக்கற வர நார்மல்னு வரையறை சொன்னாங்க; இப்போ ரெண்டுங்கற லிமிட் நார்மல் னு சொல்றாங்க.." னு சொல்றார்..

அதெப்படி, அடிக்கடி நார்மல் விகிதம் மாறுமா..?? இவர் பேச்ச கேட்டு ஹார்மோன் அமைப்பை பாதிக்கற அந்த மாத்திரைய சாப்பிட ஆரம்பிச்சிருந்தா வங்குல சிக்குன எலி மாதிரில மாட்டிருக்கோணும்..? மருத்துவர்கள் மேல உள்ள மரியாதைய குறைக்கறதே இதுபோன்ற சம்பவங்கள்தான். சக்கரய எப்படி பணம்காய்ச்சி வியாதியா காட்டுனாங்கலோ அதுபோலதான் இதுவும்.. பாவம் அந்த டாக்டர் என்ன செய்வாரு, அவருக்கு அப்படி சொல்ல சொல்லி வற்புறுத்தப்படறார். நல்ல வேளை இப்போவாவது சொன்னாரே னு இருந்தது..

No comments:

Post a Comment