Saturday 21 June 2014

உச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்

June 20, 2014

அச்சிட அச்சிட 
Modi-Quote_pink_revolutionசென்ற காங்கிரஸ் ஆட்சியில் பீப் லெதர் தொழிலுக்கு சாதகமாக மாட்டிறைச்சி மையங்கள், பசுவதைக்கூடங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு எழுதப்படாத சட்டங்களாக இந்த தொழில் ஊக்குவிக்கப்பட்டது. சட்டவிரோத பசுக்கடத்தலுக்கு ரயில்களை பயன்படுத்தும் அளவு பகிரங்கமாக நடந்தது. சில ஆண்டுகளிலேயே உலகின் நம்பர் ஒன் பீப் ஏற்றுமதியாளர் என்ற நிலைக்கு இந்தியா வந்தது. இந்த சாதனைகள்  பாலுக்கு உபயோகமற்ற வயதான மாடுகளையும் எருமைகளையும் மட்டுமே கொன்று செய்யப்பட்டது என்று பொதுமக்களை நம்ப சொன்னார்கள். இதனை பிங்க் புரட்சி என்று நாளேடுகளும், சமூக ஆர்வலர்களும் குறிப்பிட்டு எதிர்த்து வந்தார்கள். அரசியல் கட்சிகளில் பிஜேபி மற்றும் பல ஹிந்து அமைப்புக்களும், இயற்கை நலன் சார்ந்த அமைப்புக்களும் எதிர்த்து குரல் கொடுத்தனர். பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியும் தனது பிரசாரங்களின்போது பிங்க் புரட்சி பற்றி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் தேசத்தின் சொத்தான பசுக்களை அழிவிலிருந்து காப்பது குறித்து அறிவித்திருந்தனர்.
திருசெங்கோட்டு பகுதியில் மோர்ப்பாளையம் கால்நடை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வாரமும் கேரளா மற்றும் பிற பகுதிகளுக்கு கறிக்கு வெட்ட பசுக்கள் இங்கிருந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவது ஊரறிந்த ரகசியம். மத்திய, மாநில அரசுகளால் இந்த சட்டவிரோத கடத்தலைத் தடுக்க இயலவில்லை. வாரம் மூன்று நான்கு லாரிகள் பசுக்களை அடைத்து ஏற்றிச்செல்லும். வளர்க்க விரும்புவோர் வாங்கச்சென்றால் அவர்களுக்கும் நாட்டுப்பசுக்கள் கிடைக்கும். ஆனால் தற்போது சில வாரங்களாக (பி.ஜே.பி ஆட்சி அமைத்த பின்) இங்கிருந்து கடத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வளர்க்க விரும்புவோர் நாட்டுப்பசுக்கள் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் வெட்டுக்கு கடத்தப்படும் லாரிகளில் மட்டும் நூற்றுக்கணக்கில் நாட்டுப்பசுக்கள் செல்கின்றன. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களில் உள்ள பசு ஆர்வலர்களும் இந்த நிலையை உறுதி செய்கிறார்கள். ஒருபக்கம் பிங்க் புரட்சி முன்னைக்காட்டிலும் வேகமாகவும், தீவிரமாகவும் அரங்கேறி வருகிறது. மறுபக்கம் இனவிருத்தி செய்யும் நாட்டு பசுக்களின் காளைகளை சில மதமாற்ற சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன; வெளிநாட்டு அமைப்புக்கள் துணையோடு ஜல்லிக்கட்டு-ரேக்ளா  தடைசெய்யப்பட்டு காளைகள் அழிவுக்கு தள்ளப்படுகின்றன. இவை உணர்த்துவது நாட்டுப்பசுக்களின் மீது வெளிநாட்டு சக்திகள் தொடுத்திருக்கும் திரைமறைவு இன அழிப்புப் போரேயாகும்.
illegal_cow_traffickingபசுக்களைக் கடத்தும் லாரிகளைக் காட்டிக்காட்டி ஓட்டுக்கேட்டவர்கள் இன்று பொதுமக்களை எதிர்கொள்ள இயலாதவர்களாக உள்ளனர். கிராமப்பகுதிகளில் இந்த சங்கடம் மிக கடுமையாக உள்ளது என்பதே நிதர்சனம். பதவியேற்று ஒரு மாதம் கடந்தும் இதுவரை ஒரு வார்த்தை கூட பிரதமர் பசுக்கள் குறித்து பேசாமையும், பீப் மற்றும் லெதர் நிறுவனங்களுக்கு கிடைத்த சலுகைகள் தொடர்ந்துகொண்டு இருப்பதும் ஜீரணிக்க இயலாத உண்மைகளே. கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நவீன பசுக்கொலைக்கூடங்கள்; இருக்கும் பசுக்கொலைக்கூடங்களை நவீனமாக்குவது போன்ற சதிகளுக்கு எதிராக எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை. கறுப்பு பணத்தை மீட்க பதவியேற்ற முதல் நாள் கமிஷன் அமைத்த பிரதமரை பாராட்டலாம். கருப்புப்பணம் உருகிவிடப்போவதில்லை. ஆனால் தினம் தினம் மடியும் பசுக்களுக்கு உயிர்கொடுக்க யாரேனும் உள்ளார்களா? இவ்வளவுநாள், இந்த கொடுமைகளுக்கு காரணமென்று காங்கிரசை கைகாட்ட முடிந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு யார் பொறுப்பு? யார் பதில் சொல்வது? அந்த பாவமும் பசுக்களின் ரத்தமும் யாரை கறைபடுத்தும்?
இஸ்லாமிய படையெடுப்புக்களுக்கு முன்னரே ஒரு நாட்டையும் அம்மக்களின் உணர்வுகளையும் தொட்டு பார்க்க முதலில் அந்நாட்டின் பசுக்களை கவர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். பசுக்களை மீட்டவர்கள், அப்போராட்டத்தில் உயிர் விட்டவர்கள் தெய்வங்கலாக் போற்றப்பட்டனர். முஸ்லிம் படையெடுப்புக்களை அரசர்கள் தங்கள் நாடுகளை காக்க எதிர்த்தாலும் பொதுமக்களின் கோபம் இஸ்லாமிய படைகள் பசுக்களையும், கோயில்களையும் சீரழிக்க துவங்கிய போதே வெடித்துக்கிளம்பியது. அதனாலயே, பாபர் தனது வாரிசுகளுக்கு இந்தியாவில் நிரந்தர பசுவதை தடை செய்யப்படுவத்தின் அவசியத்தை உணர்த்தியிருந்தார். கிறிஸ்தவ வெள்ளையரின் காலனியாதிக்கத்திற்கு எதிரான முதல் போர் மாட்டுக்கொழுப்பை பயன்படுத்த சொன்னதன் மூலமே ஏற்பட்டது. அதை தொடர்ந்து 1917 பீகார் கலவரம், சாதுக்கள் நடத்திய டெல்லி போராட்டம், அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் என்று இன்றுவரை இந்த தேசம் பசுக்களின் பொருட்டு லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவை உணர்த்துவது அன்று முதல் இன்று வரை பசுக்கள் இந்திய மக்களின் உணர்வின் மையம் என்பதும் பசுவதை என்பது சகிப்புத்தன்மையின் எல்லை என்பதுமே.
ban_cow_slaughter_1வெறும் உணர்வுரீதியான எதிர்ப்பு என்பதை தாண்டி, பசுக்களின் ஆரோக்கியம்-சமூக-பொருளாதார ஆளுமை என்பதையும் கணக்கில் கொல்ல வேண்டும். நாட்டுப்பசுக்கள் மூலம் பல ஆயிரம் கோடி உரம், மருந்து மற்றும் பெட்ரோலிய இறக்குமதிகளை குறைக்க இயலும். நாட்டுப்பசுக்களின் மூலம் பெறப்படும் மருந்துப்பொருட்களுக்கு மிகப்பெரிய வணிகச்சந்தை உள்ளது. ஆரோக்கியம், விவசாயம், இயற்கை என்று எல்லா வகையிலும் நாட்டுப்பசுக்களின் வீச்சு அளப்பரியது. இயற்கை வேளாண்மை நாட்டுப்பசுகள் இன்றி சாத்தியமில்லை. இன்றைய நிலையில் பாரதமாதாவை விட கோமாதா முக்கியம். கோமாதாவினால் தான் பாரதமாதா வளமும் புனிதமும் பெறுகிறார். கோமாதாவை நம்பித்தான் பாரதமாதா.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நாட்டுப்பசுக்களை (Bos indicus) தேசிய விலங்காக அறிவிக்கவும், பிங்க் புரட்சிக்கு பரிகாரமாக நாட்டுப் பசுக்களை மையமாகக் கொண்ட பொருளாதார புரட்சிக்கு வித்திடவும் வேண்டும். நாட்டுப்பசுக்களுக்கு தனி அமைச்சகம், ஆராய்ச்சி மையங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையும் ஆகும்.


தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்த கட்டுரை

Sunday 8 June 2014

டேட்டா சென்டர்கள்

இயற்கை சீரழிவை தடுக்க குரல்கொடுப்போர் காணாத மிகப்பெரிய ஓட்டை ஒன்று உள்ளது. அந்த ஓட்டை நேரடியாக நம் கண் முன் தெரியாமையால் நமக்கு ஒரு மாயமானாக இருந்து போக்கு காட்டி வருகிறது. அது டேட்டாசென்டர்கள் எனப்படும் தகவல் மையங்கள். நம் இணையத்தில், பதிவேற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஈமெயில்கள், ஆவணங்கள் அனைத்தும் உலகில் எங்கோ ஒரு மூலையில் அந்த நிறுவனத்தின் தகவல் மையத்தில் உள்ள கோடிக்கணக்கான சர்வர்களில் சேமிக்கப்படுகின்றன. பாதுகாப்புக்கருதி, அதை பிரதி எடுத்து இன்னொரு டேட்டா சென்டரிலும் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல நூறு ஏக்கர பரப்பளவு கொண்ட டேட்டா சென்டர்கள் பல இடங்களில் வைத்துள்ளனர். ஒவ்வொரு டேட்டா சென்டரையும் குளிர்விக்க சிறப்பு வாய்ந்த ஏ.சி மெஷின்கள் வேண்டும். இவற்றை ப்ரெசிஷன் ஏர் கண்டிஷனிங் என்பார்கள். காற்றின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக குறுகிய அளவுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும், என்பதற்காக இந்த சிறப்பு மெஷின்கள் பயன்படுகின்றன. 


இந்த டேட்டா சென்டர்கள் வருடக்கணக்கில் நிற்காமல் இயங்கும். அதை அந்த ஏசி மிஷின்களும் நிற்காமல் வருடக்கணக்கில் குளிரூட்டும். இவை குளிரூட்ட பல நூறு மெகாவாட் மின்சாரம் சர்வசாதாரணமாக தேவைப்படும். அந்த மின்சாரம் தயாரிக்க பல லட்சம் டன் நிலக்கரி கப்பலில் சுமந்துவரப்பட்டு, எரிக்கப்படும். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டால் ஒவ்வொரு டேட்டா சென்டரும் எவ்வளவு மோசமான இயற்கை பேரழிவை உண்டாக்குகின்றன என்பது புலப்படும். தற்போது மீடியாக்கள், சினிமா உட்பட பல்வேறு துறைகள் மூலமாக புகைப்படம்-குறும்படம் எடுக்கும் பழக்கம் நவீனத்துவ  அடையாளமாக்கப்படுவதன் பின்னணியில் இருக்கும் பெரிய சூழ்ச்சி இது. ஏனெனில் சாதாரண ஆவணமா, ஈமெயிலோ சிறிய அளவு இடத்தைத்தான் எடுத்துக்கொள்ளும். ஒரு டிஜிட்டல் புகைப்படமோ, குறும்படமோ பல நூறு மடங்கு அதிக இடத்தை ஆக்கிரமிக்கும்.