Monday 28 April 2014

பொன்னேர் பூட்டிய அரசர்கள்

வருடந்தோறும் கம்போடிய அரசர், பொன்னேர் பூட்டி நாட்டுப்பசுக்கள் கொண்டு உழுது விவசாயப்பணியை சிறப்பிப்பார். இந்த பொன்னேர் பூட்டி உழவு ஓட்டும் நிகழ்ச்சி பாரத வர்ஷம் முழுக்கவே நடந்த நிகழ்வாகும். 









எல்லா மன்னர்களும் பட்டக்காரர்களும் இந்த விசேஷத்தை செய்வார்கள். தாய்லாந்து உட்பட இன்னும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பிரசித்தம். அப்போது தூவும் நெல்மணிகளை மக்கள் ஆர்வத்தோடு எடுத்துச்சென்று தங்கள் நிலங்களில் விதைப்பார்கள். தங்கள் மன்னர் அழித்த நெல்மணி வளம் பெருக்கும் என்ற நம்பிக்கை. அன்னை சீதா, ஜனக மகாராஜாவுக்கு இதுபோன்ற ஒரு நிகழ்வில் தான் கிடைக்கிறார். 




தங்க கலப்பை நாள்போக போக தங்க கொழு என்றாகி பின்னர் சிறிது தங்கத்தை மட்டும் கலப்பையில் மாட்டி உழுவது என்றாகியுள்ளது. வேளாளர்களுக்கு பொன்மேழியே கொடியாகும். 



இவை பாரத வர்ஷம் முழுக்க சீராக இருந்த பொது மரபாகும். இதை பற்றிய தகவல்கள் மேலும் தெரிந்தால் பகிரலாம்.

Sunday 27 April 2014

ஜல்லிக்கட்டு-ஆநிரை மீட்டல்

ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மட்டும் இது ‘ஏறு தழுவல்நாங்கள் பாரம்பரியமாக பின்பற்றும ‘தமிழர் கலாசாரம் என்று மார்தட்டி சொல்லிக்கொண்டு காரியம் சாதித்தீர்கள். நல்ல விஷயம்தான், வாழ்த்துக்கள். ஆனால் “ஆநிரை மீட்டல்என்பதும் இதே டமிழர் கலாசாரத்தில் காலம் காலமாக இருந்ததுதான். பசுக்களை வேற்று நாட்டவன் கடத்தி சென்றால் அவமானமென கருதி அதற்கு போர் நடத்தி வென்று மீட்டு வந்தவனுக்கு ஊர்களை, விருதுகளை வழங்கி, அந்த போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு வீரக்கல் நடுகல் என்று மரியாதைகள் செய்ததும் தமிழர் கலாசாரம் (என்று கூறிக்கொள்ளும் சேர சோழ பாண்டிய தேச கலாசாரம்) தானே..? இன்று கேரளாவுக்கு கடத்தி செல்லப்படும் பசுக்களை மீட்க மட்டும் எந்த தமிழனும் பிறக்கவில்லையா? அதை காத்து மீட்பது தமிழர் கலாசாரம்-மரபு-பாரம்பரியம் இல்லையா??
 





இதை கேட்டால், கலாசார-பண்பாட்டு காவலன் என்று கட்டம் கட்டுவது.. உண்மையில் நீங்கள் பட்டம் கட்டுகிறீர்கள்.. மகிழ்ச்சி.. எங்கள் சமூக வரலாற்றிலோ, எங்கள் பாட்டன் பூட்டன தலைமுறையிலோ, இந்த தலைமுறை சொந்தபந்தங்கள் என எங்குமே நாங்கள் கண்டிராத சில கல்யாணங்களை தமிழர் கலாசாரம் என்று வரையறை செய்து; அதை எதிர்த்த பெற்றோர்களை கொடுமைக்காரர்கள் என்று பிம்பம் உருவாக்கி தாழ்வுபடுத்த முயன்றவர்கள்தானே நீங்கள், உங்களிடம் வேறு என்ன அரசியல் விளையாட்டுக்களை எதிர்பார்க்க முடியும்?

இன்று தமிழர் என்ற அடையாளத்தை லாபி கைப்பற்றி அந்த அடையாளத்துக்கு தவறான வரையரைகளை வகுத்து அதற்குள் எல்லாரையும் பொருந்தி போக சொல்லி நிர்பந்தித்து வருகிறது. அதை மறுப்பவனை, இனவிரோதி என்றும்; அடையாள மறுப்பு என்னும் அச்சுறுத்தலும் நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு சர்வதேச அரசியல் விளையாட்டே. இவர்களின் வரையறைக்குள் ஒடுங்காமல் இருக்க (இவர்கள் வகுக்கும்) தமிழன் அடையாளத்தை புறக்கணிப்பதில் தவறில்லை.

உண்மையில் ஏறு தழுவல் என்னும் ஜல்லிக்கட்டும், ஆநிரை கவர்தல் மீட்டல் என்பது அனைத்தும் பாரதவர்ஷம் முழுக்கவே இருந்த வழக்கமாகும். விஸ்வாமித்ர மகரிஷியின் வரலாறு, பரசுராமர் வரலாறு (கார்த்தவீர்யாச்சுனன்-ஜமதக்னி-பரசுராமர் போர்), த்ரௌபதி பிறப்பின் காரணம், விராட தேச போர் என பல இடங்களில் இதற்கு உதாரணம் காணலாம்.


‘ஆகெழு கொங்கு என்று பசுக்களை மையப்படுத்தி பெருமை கண்ட கொங்கதேசத்தவராக, பசுக்களை மீட்பதிலும் காப்பதிலும் பெருமைதான். என் கிராமத்தில் பசுக்களை மீட்ட வீரனுக்கு ஊர்கள் மானியம் வழங்கி சிறப்பித்த முன்னோர் வழியில் செல்வதில் மகிழ்ச்சிதான். இரவு தூங்க செல்கையில் ஆத்ம திருப்தியும், மன நிறைவும் இருக்கிறது. ஊரை கெடுக்கும் லாபிகளுக்கு இந்த நிறைவு நிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டும் என்பது புரியும் காலம் வரும்.

Saturday 19 April 2014

பனை - சிறு பார்வை



சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்படி சர்க்கரை பற்றிய தீமைகளையும் பனையின் நன்மைகளை குறித்தும் எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அஸ்கா சர்க்கரை உத்தரவு (05.03.2014). 
சிவன்மலையாண்டவர்க்கு அர்ப்பணம்



வீடியோ இணைப்புக்களை அவசியம் பார்க்கவும்; சில வீடியோக்களின் லிங்க் தரப்பட்டுள்ளது

"பனை நம்மிடம் அதன் அடிப்படை தேவையான நீரை கூட கேட்பதில்லை. ஆனாலும் ஒரு மனிதனுக்கு தேவையான உணவு, உடை, வீடு, செல்வம் பாதுகாப்பு என அனைத்தையும் நேரடியாகவே தரவல்லது பனை. பனையை நாம் பயன்படுத்துவதில்லை என்பதால் பனை பயனற்றது என்றாகாது. இன்றைய பல்வேறு பிரச்சனைகளுக்கு பனையிடம் தான் தீர்வுள்ளது. சீமைமாடும், சாராயமும் செய்யும் அத்தனை தீங்குகளையும் செய்யும் வெள்ளை சர்க்கரையிடம் இருந்து நம்மை காக்க பனையால் தான் முடியும். ஆரோக்கியம், மருத்துவம், விவசாயம், நீர்வளம், பாரம்பரியம், குடும்பம் முதல் தேசியம் வரையிலான பொருளாதாரம் என குறிப்பிட்டு சொல்ல முடியாதவாறு நீண்டுகொண்டே போகும். நாட்டுபசுவின் அவசியத்தை போல, பனையின் மகத்துவத்தை நேரடியாகவோ எளிமையாகவோ புரிய வைத்துவிட முடியாது. ஆனாலும் நாட்டு பசுவும், பனையும் இன்றி சனாதன, சாஸ்வத, சுதேசி பொருளாதாரத்துக்கு வாய்ப்பே இல்லை ஆள் இல்லாத ஒரு காரணத்திற்காக பனை இன்று வெட்டி வீழ்த்தப்பட்டு வருகிறது. பனையின் அவசியம், இழப்பதினால் ஏற்படும் கேடு என பனையை பற்றி கொஞ்சம் பேசுவோம்.

ஆரோக்கியம்
பசுமை புரட்சி (சூழ்ச்சி) துவங்கிய காலத்தில் சர்க்கரை மேல்தட்டு மக்களின் ஆரோக்கிய தேர்வு என்பதுபோல ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது. இப்போதுபோலவே அப்போதும், மீடியா டிவி சினிமா போன்ற முட்டாளாக்கும் கருவிகள் அதை செவ்வனே செய்தன. ஒரு சேம்பில் கீழே, முதல் நாலு வரி வசனத்திலேயே தெரிந்துவிடும்.


அதாவது, படித்தவன், நாகரீகமானவன், டாக்டர் தொழில் செய்பவன்-ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை கொடுப்பவன், இவன்லாம் வெள்ளை சர்க்கரை தான் பயன்படுத்டுவான் என்பது மறைமுகமாக திணிக்கப்படுகிறது. மொத, வெள்ள சக்கரை அவ்வளவு நல்லதானு பாப்போம்.. 

கரும்பு நம்ம மண்ணின் பயிர்தான். ஆனாலும் இப்போ நாட்டு கரும்பு ரகம் மிக மிக அரிதாக போய்டுச்சு.. விளைச்சல கூட்டுறேன் னு அதிக உரத்தை இழுக்கும் ஒட்டுரக செயற்கை ரகங்களை சுகர் பேக்டரி மற்றும் விவசாய பல்கலைகழகங்கள் வெளியிடுறாங்க.. இவை நம் மண்ணின் பயிரும் இல்லை.. அது இழுக்கும் உரமும் பூச்சி மருந்தும் அதுக்குள்ளே இயற்கையா கலந்து நிக்குது.. ஆக மூலப்பொருளே விஷம் கலந்து போச்சு..

கரும்புல இருந்து சக்கரை தயாரிக்கர முறைய படிச்சாலோ, இல்ல சுகர் பேக்டரி ல வேலை செய்யரவங்களை கேட்டாலோ யாரும் சக்கரை சேர்த்துக்க மாட்டோம். கரும்பு மேல் படிஞ்சிருக்கும் மருந்துடன் கரும்பும் சேர்த்து அரைத்து சாறு எடுக்கப்படும்.

அதில் உண்ணத்தகாத, கேடு விளைவிக்கும் தொழிற்சாலை ரசாயனங்கள்  பலவும் கலக்கப்படுகின்றன.டாய்லெட் கழுவும் (நுண்ணுயிர்களை கொல்லும்) குளோரின், டி.ஏ.பி உரம் தயாரிக்க பயன்படுத்தும் பாஸ்பரிக் ஆசிட், சுண்ணாம்பு, சல்பர் டை ஆக்சைடு (விஷம்), பாலி எலக்ட்ரோலைட், காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா, மீண்டும் சல்பர் டை ஆக்சைடு, சோடியம் ஹைட்ரோ சல்பேட் என லிஸ்ட் நீளும்.



இந்த கெமிக்கல்கள் ஒவ்வொன்றையும், அதன் இயல்புத்தன்மையையும், அது ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் கெடுக்கும் என்பதையும் ஒரு தனிபதிவே எழுதலாம். அதை சர்க்கரை ஆலைகள் பயன்படுத்தும் விதத்தை நோக்கினால், இது குழந்தை முதல் முதியவர் வரை பயன்படுத்துவது என்ற பிரக்ஞையே இல்லாமல் ஈவிரக்கமின்றி செய்கிறார்களே என்று மனம் பதறும். அதுவும் கொதிக்கவிட்டு செய்வர். மிகை வெப்பத்தால் மிஞ்சி இருப்பது வெறும் குளுக்கோஸ்-ப்ருக்டோஸ், கரி மற்றும் இந்த உயிர்கொல்லி கெமிக்கல்கள் தான்.



உயிர்கொல்லி கெமிக்கல்களால் நம் வயிற்றில் இயற்கையாக இருக்கும் Gut Biome, என்னும் நன்மை செய்யும் நுண்ணுயிர் சூழல் நாசமாகும்.  இதனால் உடலின் சமநிலை, ஹார்மோன் சமநிலை என அனைத்தும் இயல்பிலிருந்து கெடும். குளோரின்,சோடா வகையறாக்கள் வயிறு மற்றும் உள்ளுறுப்புக்களை அரித்துவிடக்கூடியது. தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு கெமிக்கல் பேரோடு Health hazards என்று சேர்த்து கூகிளில் தேடி நீங்கள் தினமும் என்னென்ன வியாதிகளுக்கு அடித்தளமிட்டு வருகிறீர்கள் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

சரி, இப்போது சர்க்கரையை சாப்பிடும்போது என்னவெல்லாம் நடக்குமென்று பாருங்கள். எந்த சத்தும் இல்லாத இந்த சர்க்கரையை ஜீரணிக்கவே உங்கள் உடலில் ஏற்கனவே உள்ள விட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துக்கள் உறுஞ்சி எடுக்கப்படும். இந்த சர்க்கரை பின்னர் குளுக்கோசாகவும், ப்ருக்டோசாகவும் பிரியும். குளுக்கோஸ் உடலில் சாதாரணமாக ஜீரணிக்கப்படும். ஆனால் இந்த ப்ருக்டோஸ் ஈரலால் மட்டுமே ஜீரணிக்க முடியும். தொடர்ந்து சர்க்கரை உண்பதால் ஈரலுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டு, ஈரலில் கொழுப்பு தேங்கி, அது இன்சுலின் சுரப்பை பாதித்து சக்கரை நோய்க்கு வழிவகுக்கிறது. ப்ருக்டோஸ் இன்சுலின் சுரப்பியை மட்டுமல்ல மூளைக்கு உணவு தேவை குறித்த தவறான தகவலை கொடுத்து (ஹார்மோன் சுரப்பை தடை செய்து) அதிகளவு உணவேடுக்க செய்கிறது. இதனால் உடல் பருமன் கூடிக்கொண்டே செல்கிறது. அதேநேரம் இதய நோய்களின் தாக்கமும் கூடிக்கொண்டே செல்கிறது. அதேநேரம், சர்க்கரை உற்பத்தியின் போது கலக்கப்பட்ட பல்வேறு கெமிக்கல் விஷங்கள், உடலின் இயல்பு சமநிலையை பாதித்து பல்வேறு பெருவியாதிகளுக்கு அடித்தளமிடுகிறது. ஹார்மோன் சுரப்பின சமநிலை தடுமாறுவதால் உடலின் மொத்த இயக்கத்திலேயே தடுமாற்றம் ஏற்படுத்துகிறது. கேன்சர், கர்ப்பப்பை, ஆண்மை-குழந்தையின்மை, கிட்னி-கணையம் என்று உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பாதிக்கிறது.






இதற்கும் மேலாக இந்த விஷம், நம் மூளையை சிறிது சிறிதாக பாதிக்க துவங்குகிறது. நம் மரபணுவையும் பாதித்து அடுத்த தலைமுறையை இயற்கையிலேயே நோயுடைய தலைமுறையாக்குகிறது. மேலும்  சர்க்கரை என்பதே ஒரு போதையாக (Sugar Addiction) மாறிவருகிறது. நீங்கள் சர்க்கரை உடலில் சேர்க்காவிட்டால் உங்களால் இயல்பாக இருக்க முடியாதவாறு நம் புத்தி தடுமாறும். சர்க்கரையை உண்டால் சாராயத்தை விட மோசமான கெடுதல்களை செய்துவிடும்.

சர்க்கரை உட்கொள்வதால் நம் உடல் என்னென்ன நோய்களை உருவாக்கிக் கொள்கிறது, என்னென்ன நோய்களுக்கு அடித்தளமிடுகிறது என்று பார்த்தால்,
  • சர்க்கரை வியாதி 
  • பல்வேறு வகையான கான்சர்கள் (புற்று நோய்கள்)
  • இதயக்கோளாறு 
  • உடல் பருமன் - கொலஸ்ட்ரால்
  • ஈரல் நோய்
  • சிறுநீரக-கிட்னி கோளாறுகள் 
  • கனைய-சிறுநீரக கற்கள் 
  • மனச்சோர்வு-பதற்றம் 
  • மலச்சிக்கல் 
  • குழந்தையின்மை 
  • பொரிந்து போகும் எலும்புகள் 
  • அல்சைமர் நோய் 
  • நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் 
  • தாதுக்குறைபாடு 
  • ஹார்மோன் கோளாறுகள் 
  • நாட்பட்ட தலைவலி 
  • மூட்டுதேய்மானம் 
  • ஒட்டுக்குடல் 
  • தசை பிறழ்வு நோய் 
  • ஆஸ்துமா 
  • கண் மற்றும் பல் கோளாறுகள் 
இன்னும் பெயர் கண்டறியாத நோய்கள் பல!. இப்படி சிறிது சிறிதாக பல பெருவியாதிகளுக்கு வெள்ளை சர்க்கரை நம்மை கூட்டி சென்று விடுகிறது.



மருத்துவர் சிவராமன் (புதிய தலைமுறையில்) தமிழில்:  http://www.youtube.com/watch?v=mb7sBUnadz0






மேலே சொன்ன அனைத்து காரணங்களும் 100% அறிவியல் ஆராய்ச்சியால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் நம் மக்கள் பார்வைக்கு வராமல் இருக்கிறது. காரணம் தெரியவில்லை! அரசு தூங்குகிறதா? இல்லை தூங்குவது போல நடிக்கிறதா..??

ராபர்ட் யுட்கின் இன் புகழ் பெற்ற புத்தகமான "Pure White and Deadly" புத்தகத்தின் மின்நூல் கீழே தரப்பட்டுள்ளது.. 1970 களில் இந்த மனிதர் செய்த பனையை சர்க்கரை கம்பெனி லாபி மூடி மறைத்து இவருக்கு பைத்திய பட்டம் கட்டியது. ஆனால் இன்று அறிவியல் உலகம் இவரது ஆய்வுகளின் பின் ஓடத் துவங்கியுள்ளது.


வெள்ளை சர்க்கரை விஷம் பற்றிய அப்பட்டமான உண்மைகளை முதன்முதலில் சொல்லிய, Pure White and Deadly-John Yudkin புத்தகத்தின் Download Linkhttp://www.sheldonsblog.com/wp-content/uploads/2012/10/John_Yudkin_-_Pure_White_and_Deadly_revised_1986_OCR.pdf

மேற்குலகம் இத்தனை சர்க்கரை கொடுமைகளுக்கும் ப்ருக்டோசை மட்டுமே காரணியாக நம்மிடம் காட்டுகிறது. ஆனால், ப்ருக்டோஸ் மட்டுமே காரணியல்ல. ப்ருக்டோஸ் காய் கனிகளிலும் இருகிறது. நமது ஆண் விந்தில் உள்ள உயிரணுவிலும் அதுவே இயக்க சக்தியாக இருந்து முட்டையை அடையச்செயகிறது.  இயற்கை ஒருபோதும் தவறு செய்யாது. எனவே சர்க்கரையின் தீமை ப்ருக்டோசின் அளவுக்கதிக பயன்பாடு மட்டுமின்றி அதில் அடங்கியிருக்கும் செயற்கை கலப்பின ரகம், கெமிக்கல் உரங்கள், கலக்கப்பட்ட விஷ கெமிக்கல்கள் என அனைத்துக்கும் இந்த பாவத்தில் பங்குண்டு.

பனங்கல்கண்டு மற்றும் கருப்பட்டியில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் அடங்கியுள்ளன. கருப்பட்டி இயற்கையாகவே உடலை குளிர்சியடையச் செய்யும். அதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் எனப்படும் சர்க்கரை உடலில் கலக்கும் வேகத்தின் குறியீடு வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழ். இதனால் சர்க்கரை மற்றும் பல கோடிய நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். கருப்பட்டியில் கலபினம், ஒட்டுரகம் இல்லை; உரம் பூச்சி மருந்து அடிக்கப்படுவதில்லை; அதை தயாரிக்கையில் விஷகெமிக்கல்கள்  சேர்க்கப் படுவதில்லை; ஈரலையோ, உடலின் ஹார்மோன் அமைப்பையோ பாதிப்பதில்லை; எந்த நோயையும் வரவழைப்பதில்லை; மாறாக வந்த நோயை போக்கி வரும் நோயையும் வரவிடாது விரட்டும்.போதை நோய் உண்டாக்குவதில்லை; ஒரு துளியும் பாதிப்பில் நம்மை தள்ளுவதில்லை; மாறாக அமிர்தம் போல அனைத்து நலனையும் தருகிறது.சீர்கேட்டு இருக்கும் உடல் இயக்கத்தையும் சீரான சமநிலைக்கு கொண்டுவருகிறது.

இவை மட்டுமின்றி மருத்துவத்துறையில், சித்த-ஆயுர்வேத மருந்துகளில் பெருமளவு பனையின் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. உணவே மருந்து என்னும் நியதிப்படி, பனையின் ஒவ்வொரு பகுதியும் மருந்தாக பயன்படுகிறது. கால சூழலுக்கு ஏற்றாற்போல வெய்ய காலத்துக்கு பதநீர் நுங்கு, குளிர் காலத்தில் பனங்காய் என உடலுக்கு தேவையானதை தேவைப்படும் நேரத்தில் தாய் போல வழங்கும். சர்க்கரைக்கு மாற்றாக மட்டும் பனை மரம் சரியாகப் பயன்படுத்தப் பட்டாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமின்றியும் போகும். இதற்கு மேல், பனையின் பிற பகுதிகளின் பயன்கள் தனி! பண்ணாட்டு கம்பெனிகளின் பல லட்சம் கோடி மருந்துவியாபாரம், ஹாஸ்பிட்டல்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வர்த்தகம், இந்திய மருத்துவ 'தொழில்' போன்றவை பனையால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. 


மேலும், கள் உடலுக்கு தீங்கிழைக்காத பானம் என்பதும், டாஸ்மாக்கில் விற்கப்படும் சீமை சாராயம் விஷம் தான் என்பதும் புதிதாக சொல்லத்தேவையில்லை. டாஸ்மாக் சீமை சாராயங்களான பிராந்தி விஸ்கி ரம் போன்றவை வெள்ளை சக்கரை விஷத்தயாரிப்பின் கழிவுகளாக வரும் மொலாசசில் இருந்து காய்ச்சி வடிக்கப்படுவதாகும். அப்படியானால் அது இயல்பிலேயே எப்படி இருக்கும் என பார்த்து கொள்ளுங்கள். எனவேதான் சாராய லாபியும் பார்மா லாபியும் பனையை அழிக்க கங்கணம் கட்டி அலைகின்றன.



இன்னொரு நல்ல வீடியோ: https://www.youtube.com/watch?v=egiybK1tGmo

விவசாயம் 
ஒரு ஏக்கர் முழுவதும் பனை மரத்தை நட்டால் சுமாராக நானூறு மரங்கள் நட முடியும்;(ஆயிரம் வரை நட முடியும் என்றும் சில அறிஞர்கள் சொல்கிறார்கள்; நாம் குறைந்தபட்சமே கணக்கிற்கு எடுத்துக்கொள்வோம்). அவை பதநீர் தரும் பருவத்துக்கு வர பத்து வருஷங்கள் ஆனாலும், இன்றைய கணக்கிற்கே வருசம் ஐந்து லட்சம் வரை லாபமீட்டும். இதற்கு நாம் முதலீடு என்றோ, வேலை என்றோ, பாதுகாப்பு, நீர் பாய்ச்சல் என்றோ எதுவும் தேவையில்லை. ஒரு வருசத்தில் இரண்டே மாதம் பதநீர் பருவத்தில் வேலை செய்தால் போதுமானது. 

இந்த ஒரு ஏக்கர் பனையின் மூலமாக கிடைக்கும் கருப்பட்டி பத்து ஏக்கர் கரும்பு மூலமாக கிடைக்கும் சர்க்கரைக்கு இணையானதாகும். அதாவது அளவின அடிப்படையில்; வருமானத்தின் அடிப்படையில் பார்த்தாலும் கருப்பட்டி மூலமே பத்து ஏக்கர கரும்புக்கு நிகராக வருமானம் ஈட்டும். ஆக பத்து ஏக்கர பனை ஈட்டும் கருப்பட்டி வருமானம் நூறு ஏக்கர கரும்பு வருமானத்துக்கு நிகர்.


இன்று நாம் விவசாயம் என்றால் அதற்கு செலவாகும் உரம், மனித உழைப்பு மட்டுமே கணக்கெடுக்கிறோம்; ஆனால் நாம் செலவிடும் நீரை கண்டுகொள்வதில்லை. கரும்புப்பயிர் நீரை கடுமையாக உறுஞ்சும். நெல் விளையும்  நிலங்கள் தேவை. வெறும் மழை மற்றும் பனி நீரை கொண்டு கரும்பு கொடுப்பதை விட பத்து மடங்கு அதிக சர்க்கரை தரும் பனையை விடுத்து கரும்பை பயிரிடுவது முட்டாள்தனம் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இந்த கரும்பினால் தானிய சாகுபடிகளை இழந்துள்ளோம். நீர் வளத்தை கேடுத்ததில் கரும்புக்கு பெரும்பங்கு உண்டு. 

அதேபோல தென்னையும் நம் பெரும்பாலான இடங்களை விட்டு நீக்கப்பட வேண்டிய பயிர். தென்னை நீர்வளம் மிக்க இடங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் நீர்வளம் குறைந்த பகுதிகளும் தென்னையை நட்டு நிலத்தடி நீரை துவம்சம் செய்து வருகிறார்கள். விவசாய சங்கங்கள் கள் இயக்கம் துவங்கி போராடுகிறார்கள். அவர்கள் கூட கள் இறக்க தென்னை தென்னை என்று தென்னையையே மையமிடுகிறார்களே ஒழிய பனையை மையப்படுத்த மறுக்கிறார்கள்.

ஆக, இனிப்புக்கு கருப்பட்டி பயன்படுத்தி வெள்ளை சர்க்கரை விஷத்தை தவிர்ப்பதன் மூலம், சர்க்கரைக்கான சாகுபடி நிலப்பகுதி பத்து மடங்கு குறையும்; அதேசமயம் கரும்பு ஆக்கிரமித்த பூமியில் பிற பயிர் சாகுபடி பெருகும்; கரும்புக்கான நீர் தேவை-பம்ப் மின்சாரம் அப்படியே மீதி!; கரும்புக்கு கொட்டப்படும் அவ்வளவு உரமும், அதை தயாரிக்க செலவாகும் மின்சாரம், மாசு வெளியீடு அனைத்தும் மீதி!; கரும்பை சர்க்கரையாக்கும் சுகர் பேக்டரிகள் மட்டுமல்ல சாராய விஷத்தை தயாரிக்கும் சாராய பெக்டரிகளையும் அப்படியே மூடலாம்; அவற்றின் கரண்ட்-எரிபொருள்-அத்தனை செலவுகளும் இயற்கை வள சுரண்டல் இயற்கை மாசுபாடு அனைத்தும் மீதி!; இவை அனைத்துக்குமான போக்குவரத்து செலவுகள், விபத்துக்கள், அவ்வண்டிகள் வெளியிடும் காற்று மாசு என அனைத்தும் மீதி; இதற்கு மேல், மீதியாகும் மனிதவளம்-உழைப்பு; அதன்மூலம் ஏற்படும் மாற்று வருமான மூலம் எல்லாம் மீதி! மேலும் கரும்பு சர்க்கரை மற்றும் சாராயம் சாப்பிடுவதால் உண்டாகும் பல்வேறு நோய்களுக்கான மருத்துவ செலவுகள், அதோடு பனை பொருட்கள் வரவிடாமல் தடுக்கும் நோய்கள மற்றும் இங்கிலீஷ் மருந்துக்கு மாற்றாக தரும் மருந்து பொருட்கள்  அத்தனையும் மீதி!; மருந்துகள் தயாரிப்பதால் உண்டாகும் இயற்கை மாசுபாடுகள் அப்படியே மீதி!. அந்த நோய்களினால் ஏற்படும் மனித சக்தி இழப்புக்கள் அத்தனையும் மீதி.


ஒரு கிராமத்தின் தேவைக்கு அக்கிராம நிலங்களின் எல்லைகளில் உள்ள பனையே போதுமானது. ஆக, சர்க்கரைக்கென்று தனி விவசாயம்-மனிதவளம் தேவையே இல்லை. பனை கிளைகள் இல்லாமல் இருப்பதால் அதன் முட்டைகளும் சிறியனவே என்பதால் நிழல் கட்டாமல் பிற பயிர்கள் சாகுபடிக்கு ஏதுவாக உள்ளது. அதை கரைகளில் நாடுவதால் விளைச்சல் பாதிக்கப்படுவதில்லை.

இவை அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால் வெறும் இனிப்புக்கு மாற்றாக பனையை பயன்படுத்துவதன் மூலமே பாரதத்தில் பொருளாதார, இயற்கை, ஆரோக்கிய, சமூக புரட்சியே ஏற்படும். இந்த மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்சக்தி பனைக்கு உண்டு.

பனையின் வேர்கள் பரவலாக செல்லாமல் கீழ்நோக்கி செல்லும் தன்மையுடையது. மண் அரிப்பு, சரிவு போன்றவற்றை தடுப்பதோடு, மண்ணில் விழும் நீரை நேரே நிலத்தடிக்கு கொண்டு செல்லும் ஆற்றல பனைக்கு உண்டு. அதனாலேயே நம் முன்னோர்கள் ஏரி-குளக்கரைகளில் நிறைய பனைமரங்களை வைத்தனர். பனை இருக்கும் பூமியில் நிலத்தடி நீர் சீக்கிரம் ஊறிவிடும். பனை மரத்தை வெட்ட இலங்கையில் உள்ளது போல தடை சட்டம் வந்துவிட்டால் ஏரி குளங்களை யாரேனும் ஆக்கிரமிக்க முடியுமா..?




ஒரு ஏரியின் எல்லைகளில் நடப்பட்டுள்ள பனைமரங்கள் 

[[மண் அரிப்பை தடுத்து கரையை பலப்படுத்தி, நிலத்தடி நீரை பெருக்க பனை விதைக்கும் ஊரக வளர்ச்சி துறை: 

நிலத்தின் எல்லைகளுக்கு செலவற்ற உறுதியான வேலியாகவும் பனை பயன்படுகிறது. ரோடு மற்றும் பாதைகள் சரியாமல் இருக்கவும் பனை உதவுகிறது. சாலையோரங்களில் பனை வைப்பது ரோட்டின் ஆயுளை உறுதிப்படுத்தும். 

வனவிலங்குகள், குறிப்பாக யானை வராமல் தடுக்க இயற்கை அரணாக பனை விளங்கும். யானையால் இடைவெளியில் நுழைந்து செல்லவோ, பிடுங்கவோ, உடைக்கவோ முடியாது. 

பனை உள்ள இடத்தில் இடி-மின்னல் இறங்கினால் அதை பனை தன் உயிரை தந்து தாங்கிக் கொள்ளும்.இலங்கை போரில் பல குண்டுகளை தாங்கிக்கொண்டு நூற்றுக்கணக்கான மக்களை காத்த பெருமை பனைக்கே சேரும். சுனாமி தாக்கிய போது பேரலை கூட பனைமரங்களை ஒன்றும் செய்யவில்லை. கடலோரத்தின் காவல் அரணாக பனை இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.

பனை பல்வேறு பறவையினங்களுக்கு கூடு. பனையில் மட்டுமே வாழக்கூடிய பறவையினங்கள் சில உண்டு. இப்பறவையினங்கள் இயற்கை சூழலுக்கும் விவசாயத்துக்கும் இன்றியமையாதவை. பனை அழிவதால் அவை பெருமளவில் பாதிக்கப்படும். இதனால் சுற்றுச் சூழல் சங்கிலியே பாதிக்கப்படுகிறது.



அசைவ சர்க்கரை
உணவு துறை நம்மிடம் மறைக்கும் மற்றுமொரு பெரிய உண்மை-சர்க்கரை சுத்த அசைவம் என்பது. சர்க்கரையை வெள்ளையாக்க, மாட்டெலும்பு பயன்படுத்தப்படுகிறது. Bone Char எனப்படும் எரிக்கப்பட்ட மாட்டெலும்பு பில்டராக பயன்படுகிறது.



அதுமட்டுமின்றி, சர்க்கரையில் சேர்க்கவேண்டிய கால்சியதுக்கு-கார்பனுக்கு மாற்றாக மாட்டெலும்பு பொடி பல சர்க்கரை ஆலைகளில் சேர்க்கப்படுகிறது. Natural Resources என்றும் இன்ன பிற பெயர்கள் பிராண்டுகள் பயன்படுத்தியும் இந்த உண்மை வெளியே தெரியாதவாறு மறைத்து செயல்படுகிறார்கள்.


எனவே இனி சர்க்கரை கொண்டு செய்யப்படும் இனிப்பு பலகாரங்கள்,  உணவு எதுவும் சைவ உணவுப் பழக்கமுடையவர்கள் பயன்படுத்தக் கூடாது. கோயிலில் வெள்ளை சர்க்கரை கொண்டு செய்யப்பட்ட பொருட்கள் உள்ளேயே விடக்கூடாது. வெள்ளை சர்க்கரை உண்டவர்கள் கோயிலுக்கு செல்லவே கூடாது. 

உபரிபொருட்கள்:
பனையின் மூலம் 800+ பயன்களும், 80+ உபபொருட்களும் கிடைக்கின்றன என்பதை தாளவிலாசம் என்னும் நூல் தெரிவிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரிய புத்தகமாகும். பணியை பற்றிய நூறு பாடல்களை கொண்ட புத்தகம் அது. பனையில் வீணான பாகம் என்று எதுவுமே கிடையாது. கைவினைப் பொருட்கள், பாய், உணவுப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என்று பட்டியல் நீளும்.








நன்றி: http://www.katpahachcholai.com, பனை ஆர்வலர்கள் அனைவரும் இந்த தளத்தை அவசியம் பார்க்க வேண்டும். பனையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பராமரிக்கிறது; அந்த தொழிலை எப்படி வளர்கிறது என்று அறியலாம். இலங்கை அரசு 1993 முதலே பனையை வெட்ட தடை விதித்துள்ளது, என்பது குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய செயலாகும்.

மேலே படத்தில் உள்ள பொருட்களை இலங்கை பனை அபிவிருத்திச் சபை உற்பத்தி செய்த பனைப்பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தி வருகிறது. பயிற்சி முதல் சந்தை வரை, பனை வளத்தை பெருக்க பனைத்தொழிலை வளர்க்க நல்ல முயற்சிகள் செய்கிறார்கள்.

பனைக்காக இலங்கை அரசின் டாக்குமெண்டரி.. 




பனைவளம் என்னும் நூல் பல அற்புதமான தகவல்களை தருகிறது. அந்நூல்:http://www.noolaham.org/wiki/index.php/பனை_வளம்

மேலும் வாசிக்க பனை நூறு: http://www.noolaham.org/wiki/index.php/பனை_நூறு

கலாசாரம்
சிலகாலம் முன்பு வரை, உணவு முதல் உறக்கம் வரை எதோ ஒரு வகையில் பனையை மனிதன் சந்திக்காத நாள் இருக்காது. அப்படிப்பட்ட பனை நம் கலாசாரத்தோடும், பாரம்பரியத்தொடும் ஒன்றி இணைத்துள்ளது. 

பெண்கள் அணியும் தாலியின் தோற்றமே பனையில் இருந்துதான். பனையின் இன்னொரு பேர் தாலம். அந்நாளில் அரசர் திருமணத்தை அங்கீகரித்து எழுதித்தரும் பனை ஓலையையே தாலியாக சுருட்டி மாங்கல்ய அணியாகிய மங்கல கயிற்றில் சேர்த்து கட்டுவார்கள். இற்று போகவே பின்னாளில் அம்மரபு களிமண் மற்றும் அரக்கு என்று தாண்டி தங்கத்திற்கு மாறியது. ஏட்டு சுவடிகள் மூலம் நமக்கு அனைத்து இலக்கண இலக்கியங்களையும், சாஸ்திர,சித்த, விஞ்ஞான நூல்கள் அனைத்தையும் பாதுகாத்து தந்தது பனை.


சேர மன்னரின் மாலை பனை மாலையாகும். தற்கால தமிழக சர்க்காரின் அரசு மரமும் பனையாகும். பனையை காக்க தவறிவிட்டாலும் வெக்கமில்லாமல் அரசு மரம் என்று சொல்லிக்கொள்வதில் குறையில்லை. தேசிய விலங்கு என்று புலியை காக்க சர்க்கார் காட்டும் தீவிரத்தை பனைக்கும் காட்டினால் மரத்தோடு சேர்த்து நாடே பிழைக்கும்.

சீர் சடங்குகள், கோயில் படையல், சுனையில் கருப்பட்டி சார்த்துதல், காதோலை, சொக்கப்பனை கொளுத்தல், பனம்பூ பட்டாசு, நுங்கு வண்டி என பனை கிராமிய வாழ்வின் சடங்குகளில் நீங்கா இடம் பிடித்தது. 

பஞ்சாமிர்தம், என்று நாம் சொல்லிக்கொள்ளும் இன்றைய பானம் பஞ்சாமிர்தமே அல்ல. பஞ்சாமிர்தம் என்பது நிஜத்தில், நாட்டு பசுவின் பால், தயிர், நெய், பனங்கல்கண்டு/பதநீர் மற்றும் தேன் ஆகியவையே. இந்த உண்மை பஞ்சாமிர்தம் ஒரு வருசமானாலும் கெடாது. இதை உண்டுதான் பழனி முருகன் தெய்வ சக்தி துறந்து வாழ்ந்து வந்தார் என்பது கூற்று. பனைமரத்தைய்யன் என்ற சாமி திருச்செங்கோட்டில் உண்டு. பனையை மையப்படுத்திய கிராம தெய்வங்கள் ஏராளம் உண்டு.

தொல்காப்பியம் முதல் சிலப்பதிகாரம் வரை, ஞானசம்பந்தர் பாடல்கள், சுந்தரர் பாடல்கள், விவேக சிந்தாமணி, திருமுறைகள், திருமூலர் பாடலகள் என்று பனையை பற்றி சங்க இலக்கியங்களில் பாடல்கள் பரவி கிடக்கின்றன.

தொண்டை தேசம், திருப்பனங்காட்டூர் ஆலயத்தில் இறைவன் தாலபுரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். இங்கு ஸ்தலமே பனை மறக்காது தான். ஸ்தல விருட்சமே பனைமரம்தான். கொங்கதேசம் ராசிபுர நாடு அத்தனூர் அம்மன் கோயிலில் ஆண்பனை இறையருளால் பெண் பனையாகி பனம்பழம் தந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோட்டில் பணிமலைக்காவலர்  கோயில் விழாவில் பனைமரத்தய்யன் வழிபாடு பிரசித்தம். தற்போது அறநிலையத்துறையின் அக்கிரமங்களின் பகுதியாக இம்மரம் காணவில்லை. ராசிபுரத்தின் பெண் பணிக்கும் அதே கதிதான். இயற்கைக்கு அப்பாற்பட்டு பல தலைமுறைகளாக - நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் இறவாப்பனை- பேரூர், கோவை மாவட்டம்.




கிறிஸ்தவம்-இஸ்லாம்: கிறிஸ்தவமும் இஸ்லாமும் தங்கள் மத புத்தங்களில் பனையை பற்றி பெருமையாக குறிப்பிட்டுள்ளனர். 

இஸ்லாமிய குரான் புத்தத்தில்,

This is a good tree to which Allaah likened the word of Tawheed when it is established in the sincere heart, where it bears fruits of good deeds that strengthen eemaan (faith).

Allaah says (interpretation of the meaning): "See you not how Allaah sets forth a parable? – A goodly word is as a goodly tree, whose root is firmly fixed, and its branches (reach) to the sky (i.e., very high)." [Ibraaheem 14:24]

This is the tree to which Allaah likens the believer because it is good in all aspects, it is lasting and it offers different kinds of benefit. Ibn ‘Umar reported: "The Prophet (peace and blessings of Allaah be upon him) said: ‘There is a kind of tree whose leaves do not fall and it is like the Muslim. Tell me what it is.’ The people mentioned different kinds of desert trees … and I said to myself, ‘It is the date palm tree,’ but I felt too shy to speak up. Then the people said, ‘Tell us what it is, O Messenger of Allaah.’ He said: ‘It is the date palm tree.’" (al-Bukhaari, 60)


ஒரு கிறித்தவ அறிஞர் பனையை பற்றி எழுதிய புத்தகம்: 

நாட்டுபசுவும் பனையும்

நாடுபசுவும் பனையும் நம்மிடம் கழிவை பெற்றுக்கொண்டு அமிர்தத்தை தருவன. அனவசியங்களை பெற்று அத்தியாவாசிதேவைகளை பூர்த்தி செய்வன. அப்படிப்பட்ட நாட்டுபசுவை பாரத மக்கள் காமதேனு என கோமாதா என வணங்குகிறார்கள். அதேபோல, பனைமரத்தை கற்பக விருட்சமென வணங்குகிறார்கள். காமதேனுவும் கற்பகவிருட்சமும் பாற்கடலில் இருந்து தோன்றியவை என்பது சாஸ்திர வாக்கு. பயிர்களுக்கு தாயின் கர்ப்பப்பை போன்றதும், உலக உயிர்களுக்கு உணவு தருவதுமாகிய வளமிக்க மண்ணை சுட்டு நிரந்தரமாக பயனற்றதாக்கி வவ்ரும் செங்கல் சூளைக்காரர்கள் தற்போது கற்பக விருட்சமான பனையின் கொலைக்கு பேரும் காரணமாக இருந்து வருகிறார்கள். அறியாமல் செய்தவர்கள் இனியேனும் நிறுத்த வேண்டும். தவறுக்கு பரிகாரம் தேட வேண்டும்.




நாடார் - சாணார் - மூப்பன் - மரமேறி

மேலே சொல்லப்படும் பெயர்களால் குறிக்கப்படும் சமூகத்தவர் தான் நம் முன்னோர்களை பல்வேறு நோய்கள் வராதவாறு கருப்பட்டி உட்பட பல பனை பொருட்கள் செய்து தந்து காத்தார்கள். நம் தேசத்தின் உண்மையான பொருளாதார சக்திக்கு பெருந்துணையாக இருந்தவர்கள்.சர்க்கார் உழவர்களை கைவிட்டு அவர்களை சிறிது சிறிதாக அவர்கள் தொழிலில் இருந்து வெளியேற்றிக்கொண்டிருப்பது போல, பனை மரங்கள் அழிவையும் நாடார்களின் வாழ்வாதார பிரச்சனைகளையும் கண்டும் காணாது விட்டு அவர்களை மறைமுகமாக பழிவாங்குகிறார்கள். அவர்களின் சாதி அமைப்புக்களும் நாடார்களின் பாரம்பரிய தொழில் குறித்து கடுமையான போராட்டங்கள் நடத்தாமல் உள்ளன. வேறு தொழிலுக்கு மாறி செல்வதும், சர்க்கரை துறையை-அவர்கள் உரிமையை நாடார்களிடம் இருந்து பிடுங்கி சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு வழங்கி வருகிறார்கள். 

அதோடு பனை தொழிலில் ஈடுபடுவோரை ஊக்கமிழக்கச் செய்ய எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சிகள் செய்கிறார்கள். விவசாயம் போலவே, அதை சமூகத்தில் தாழ்வான தொழிலாக காட்ட நினைக்கிறார்கள். கொங்கதேசத்தில் பூந்துறை நாடு வெள்ளோடு சமஸ்தான வரலாற்றில் நடந்த சம்பவமொன்றில் வரி கொடுக்க மூப்பரிடம் இருந்து பொன் பெற்று கட்டிய சம்பவம் உள்ளது. அவ்வளவு செல்வா வளம் படைத்தவர்களாக நாடார்கள் அக்காலத்தில் இருந்துள்ளனர். 

எனவே பெருநிறுவனங்களின் கூட்டு சதியையும், மீடியாக்களின் போலி பிம்பத்தையும் உடைத்து இத்தொழில் புத்துயிர் பெற்று வளமோடு பெருக அனைத்து தரப்பினரும் செயல்படுவது அனைவருக்கும் நன்மை செய்வதாக அமையும்.

மீண்டு வருது பனை.. மீண்டும் வருது பனை..

இன்று மாநகரங்களில் பலர் வெள்ளை சர்க்கரை விஷத்தை விட்டு பனங்கல்கண்டு மற்றும் பனங்கருப்பட்டியை போடி செய்து வைத்து பயன்படுத்திவருகிரார்கள். ஒரு வீட்டில் எடுக்கப்பட்ட படம்,



தன்னார்வலர்கள் பலர் பனையை காக்க ஆங்காங்கே தீவிர களப்பணி செய்து வருகிறார்கள். ஒரு சேம்பில் கீழே,


கற்பகத்தரு, சிறிய டாக்குமெண்டரி: http://www.youtube.com/watch?v=VpYHQ7AcwxA

இறுதியாக.. இதை காணத்தவறாதீர்கள்..








Sunday 13 April 2014

சித்திரைகனி புத்தாண்டு நினைவுகள்

புத்தாண்டு அன்று எங்கள் ஊர் மாரியம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுக்கும் விழாதான் முதல் வேலை. வெள்ளை வேஷ்டி, பனியன், தீர்த்த குடம், உருமாலைக்கு துண்டு என்று எடுத்து சைக்கிள் கேரியரில் குடத்தை பொறுத்திவிட்டு கோயிலுக்கு சவாரி கிளம்பிவிடும். நான் வளர வளர தீர்த்த சொம்பும் தீர்த்த சட்டியாகி பின்னர் குடமாக மாறியது. லேட்டானால் L.R.ஈஸ்வரி குரலுக்கு பிரேக் போட்டு, பொடுசுகள் கோயிலில் மைக்செட்காரரிடம் வாய்ப்பு கேட்டு, அரசியல் மேடைகளில் தாங்கள் கவனித்த சொல்லாடலை வைத்து பக்தர்கள் அனைவரையும் சீக்கிரம் வர சொல்லிமைக்கில்அறைகூவல் விடுப்பார்கள்.  பாய் கடையில் பூ வாங்கிக்கொண்டு கோயிலில் இருந்து எல்லாரும் ஒன்றாக ஆற்றங்கரைக்கு போவோம். வழியில் மாந்தோப்பில், தீர்த்தக்குடத்தில் செருக மாவிலைகளோடு சித்திரை மாத மாங்காய்களும் மாம்பிஞ்சுகளும் சூறையாடப்படும். புதிதாக வருபவர்கள் பயந்தால் சீனியர்கள் இதெல்லா நம்ம கோய காடு; கவுர்மெண்டு கோயல எடுத்து கோய காட்ட திருச்செங்கோடு முனிசிபாலிட்டிகாரனுக்கு குடுத்துட்டாணுக.. மொத திரடன் அவன்தான்.. நம்ப காடு இதெல்லாம்; நம்பு பாட்டங்காலத்துல கோயளுக்கு உட்ட காடு.. எவனாவது வந்து கேட்டா பாத்துக்கலாம் என்று ஜூனியர்களுக்கு தெகிரியம் சொல்வார்கள். பின்னர் ஆற்றில் ஜலக்கிரீடை துவங்கும். ஆற்றுநீருக்கென தனிப்பட்ட வாசமும் வெதுவெதுப்பும் உற்சாகம் தரும். விளையாட்டு ஒரு மணிநேரம் நீளும். ஒவ்வொருவராக ஆற்றோர அரசமர பிள்ளையாருக்கும் நாகருக்கும் மூன்று முறை நீர் எடுத்துவந்து ஊற்றுவார்கள். பின்னர் குடங்களில் தீர்த்தம் பிடிக்கப்பட்டு, பறித்த மாவிலைகள் செருகி, வாங்கிய பூக்கள் சுற்றப்பட்டு, கோயில் பண்டாரம் குடங்களுக்கு பொட்டுபோட்டு, ஆற்றங்கரையில் பூஜை துவங்கும். கதம்ப பூவின் வாசம் மூக்கை வருட சீமாடு கூட்டி குடங்கள் தலைக்கேறும். தங்கள் கோயில் உரிமையும் கடமையும் தவறாத எங்கள் ஊர் பறையர்கள் தப்பட்டை வாசிக்க கோயிலை நோக்கி புறப்படுவோம். அவர்களின் வாசிப்பு எங்கேயோ பல நூறு வருடங்களுக்கு முன் நம்மை தூக்கி செல்லும். மனதில் பல நூறு வருடங்களுக்கு முன் எங்கள் பங்காளி வீட்டு பெண்ணாக பிறந்து வாழ்ந்த எங்க மாரியம்மன் காலம்தானோ அது என்று எண்ண வைக்கும். எங்க ஊர் தெய்வம் என்பதை விட அம்மாயி என்று வணங்குவது மனதிற்கு நெருக்கமாக உணர வைக்கும். கஷ்டமான சூழலில் கனவில் வந்து அப்படி செய் என்று ஆலோசனையும், பலவீனமான காலங்களில் தைரியமும் சொல்லும். பலரும் சாமி வந்து ஆடுவார்கள். வருடந்தோறும் தவறாமல் சாமிவரும் சிலரின் மீது என் கண்கள் எப்போதும் இருக்கும். முஸ்லிம்கள் கூட குடத்தில் நீர் கொண்டுவந்து  ரோடுகளில் ஊற்றி பக்தியோடு வணங்குவார்கள். கோயிலை மூன்று சுற்று சுற்றி தீர்த்தம் ஊற்றி மாரியம்மனை குளிர்விப்போம். மதியம் பொங்கல் வைக்க சந்தை இடத்தில் பெண்கள் தயாராகும்போது ஆற்றில் விளையாடி வந்து அபிசேகம் முடித்து அவரவர் குடத்தை தேடிபிடித்த களைப்போடு வீட்டுக்கு வந்து சேர்வோம். கொண்டுவந்த தீர்த்தம் வீடெல்லாம் தெளிக்கப்படும். தீர்த்தகுடம் கோயில்தேர்போல, அடுத்தவருடம் வரை அலங்காரத்துக்கும் ஆராதனைக்கும் காத்திருக்கும். 

சிங்கப்பூர் வந்த பிறகு, சித்திரை தீர்த்தக்குடத்திற்கு வாய்ப்பின்றி போனது. போன வருடம் வாய்ப்பு கிடைத்த போதும், ஆற்றில் நீருக்கு பதில் சாய விஷம்தான் ஓடுகிறது என்று கண்கூடாக கண்டு நானே போகவில்லை. எங்க அம்மாயி (மாரியம்மன்), கோவக்காரி. பேரேஜ் பாறைகளே சாயமிட்டதை போல மாறிவிட்டது. அந்த விஷத்தை கொண்டு ஊற்ற மனம் ஒப்பவில்லை. நீயே பாத்துக்கம்மாயி என்று மனம் வருந்தி சொல்லிவிட்டு அக்கட்ட வந்துவிட்டேன். இன்று முஸ்லிம்களும் கோயில் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதில்லை என்று கேள்விப்பட்டேன். கிராம நிர்மாணம் செய்யும்போது மேற்கே அரசமரம் வைப்பதற்கு சாட்சியாக இருக்கும் எங்கள் ஊர் அரசமரம் இன்று புதிய பேரேஜ் கட்டுமானத்தில் ஓரத்தில் கம்பீரம் குறைந்து காணப்படுகிறது. உலகமயமாக்கல் என்னும் அரக்கனின் பிடியில் கிராமங்கள் சிக்கியிருந்தாலும், முன்னைவிடவும் ஊரில் பக்தி கூடியுள்ளதாகத்தான் அறிகிறேன்.

பக்கத்து வீடுகளில் சிலர், பக்கத்து ஊரில் நட்டாத்தீஸ்வரன் (நட்டாற்று ஈஸ்வரன்) கோயிலுக்கு சென்று வருவார்கள்; எனக்கு ஏனோ எங்க அம்மாயி கோயிலே நேரத்தை இழுத்துக்கொண்டதால் ஈஸ்வரனை தரிசிக்க வாய்ப்புக்கிட்டாமல் போனது.

சித்திரை ஒன்றுதான் எங்கையனின் நினைவு நாள். அவரின் படத்தை நான்தான் சுத்தம் செய்து பொட்டு பூவெல்லாம் பொட்டு, சாமி கும்பிட ஏற்ப்பாடு செய்வேன். அவரது உடற்கட்டு வீரதீர செயல்களை கேட்கும் போது பெருமையாக இருக்கும். ஆனாலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பது வருந்தத்தக்கது. அவரும் அவரது சகாக்களும் தீவிர திமுக செயல்வீரர்கள். தற்காப்புக்கோ என்னவோ. அது ஒருகறைபட்ட தலைமுறை. வெள்ளையர் ஏற்ப்படுத்திய ஐம்பது வருஷ பஞ்சகாலத்து கொடுமையால் தங்கள் பாரம்பரிய மரபுகளை மறந்த தலைமுறை. ஊரில் தர்மத்தை காக்க வேண்டிய பொறுப்புள்ள மக்கள் தர்மம் தவறி நடந்தார்கள். குலகுருவின் அவசியம் என்ன என்பதை எனக்கு உணரவைத்தது எங்கையன் தலைமுறை வாழ்க்கை. ஒரே நாட்டுபசுவின் கறந்த பால் சூடாறும் முன் சட்டியோடு அப்படியே குடிப்பாராம்; கோயில்களுக்கு செலவழிப்பதில் கணக்கு பார்க்கமாட்டார்; திருப்பதிக்கு பொட்டுக்கூடையில் பணத்தை கொண்டுபோய் கொட்டுவாராம் என்று அவரின் பிரதாபங்கள் நீளும். சித்திரைக்கனிக்கு ஊரில் மற்ற சொந்தங்கள் தங்கள் காணியாச்சி கோயிலுக்கு சென்றுவருவார்கள். நாங்கள் ஏனோ போவதில்லை.


அப்புறம் என்ன, லீவ் நாள் ஜாலிதான்... எல்லாரும் தமிழ் புத்தாண்டு என்று அழுத்தி சொல்கிறார்கள். புத்தாண்டு என்றாலே சித்திரை தான். யாரும் Happy English New Year” என்று சொல்வதில்லை. மேற்கத்திய புத்தாண்டு என்பதே யூதர்கள் ஆண்குழந்தை பிறந்த எட்டாம் நாள் செய்யும் சுன்னத் போன்ற சடங்கு, இயேசுவுக்கு செய்யப்பட்ட நாள்தான் என்கிறார்கள். மேற்கத்திய புத்தாண்டின் பின்புலம், உள்ளிருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை. எந்த புத்தாண்டும் இனத்தை அடிப்படையாகவோ, மொழியை அடிப்படையாகவோ கொண்டு மாறுவதில்லை. அது இயற்கையின் சுழற்சி காலம் பொறுத்துத்தான் என்பதே நிஜம். திரு.பாலகவுதமன் சொல்லியபிறகே புத்தாண்டு மாற்ற பின்னணியில் இருந்த சூது மற்றும் முட்டாள்தனம் பற்றி அறிய முடிந்தது.