Tuesday 31 December 2013

மெகா சீரியல்கள்

மெகா சீரியல்கள் 
------------------------
S.Ve.சேகர், B.R.சோப்ரா, Y.G.மகேந்திரன், நாகா போன்றோரை எண்ணி ஏங்க வைத்துவிட்டார்கள் இன்றைய சின்னத்திரை நாடக இயக்குனர்கள்.

தற்காலங்களில் வரும் நாடகங்களில் சினிமா இறுதி கட்ட காட்சி பார்ப்பது போல இரைச்சல் பின்னிசை, பளீர் பளீர் என்று ஒளி வீச்சு, அதிர்வு நிலையில் டி.வி. யை வைத்தது போல கிடி கிடு என நடுக்கம். அதாவது, நிலைமையின் தீவிரத்தை காட்டுகிறார்களாம். படபடப்பு, ஆக்ரோஷம், கடுமையான சொல்லாடல் போன்றவை தான் இன்றைய நாடகங்கள் கற்று கொடுக்கின்றன. மலேசியா உட்பட பல்வேறு இடங்களில் தமிழ் மக்களே இது போன்ற நாடகங்களுக்கு தடை கோரி போராடியுள்ளது வெளியே தெரியாத ஒன்று. எப்போது நாடகத்தை பார்த்தாலும் ஒன்று மிக பெரிய இழப்பை சந்தித்தது போன்ற சோக இசை இல்லை, மிக கொடூரமான இறுதிகட்ட காட்சி போன்ற இசை. இப்படி தினம் தினம் பெண்கள் மத்தியில் இதுபோன்ற நாடகங்களை போடுவதால் அவர்களை உணர்ச்சி பிழம்பாக மாற்றி வைத்துள்ளனர். சிறு விசயங்களுக்கு கூட அதீத உணர்ச்சிபூர்வமான ரியாக்சன் வருகிறது.



இதுவே 90 களில் வந்த நாடங்களில் ஒரு சலனமற்ற, நிதானமான, அதேசமயம் விறுவிறுப்பு, நகைச்சுவை கொண்ட கதைகளத்தோடு நாடகத்தை நகர்த்துவார்கள். பார்ப்பவர்களுக்கு ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நாவல் படிப்பது போல இருக்கும். S.Ve.சேகர், கிரேசி மோகன், Y.G.மகேந்திரன் போன்றோரின் நகைச்சுவை, குடும்ப நாடகங்கள் பார்க்கும் போது வீட்டில் வசந்தம் வீசும். நாகா இயக்கிய மர்ம தொடரில் கூட விறுவிறுப்பும், நிதானமான பொழுதுபோக்கும் இருக்கும். B.R.சோப்ரா போன்றோரின் ராமாயணம், மகாபாரதம் போன்ற பக்தி-இதிகாச நாடகங்கள் இன்றும் மறக்க இயலாது. திகில் நாடகமான நிஷா காந்தி கூட இதே வகைதான்.

சுருக்கமாக அன்றைய நாடகங்கள் பார்க்கும்போது தியானம் செய்தது போன்ற திருப்தியும் நிறைவும் கிடைத்தது. இன்றைய நாடகங்களில் இருந்து வீட்டு பெண்களையும் குழந்தைகளையும் எப்படி காத்து மீட்பது என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment