Tuesday 31 December 2013

நீர் வள்ளல்கள் தேவை

கோவில், கல்வி கூடங்கள், மருத்துவ மனைகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விஷயம் புண்ணியதிற்காக பெருமளவில் கட்டப்பட்டன.

இன்றைய நிலையில், ஏரி-குளங்கள் வெட்டுவது மிக இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. காலத்தின் கட்டாயம். அரசாங்கம் மட்டும் என்று இல்லாமல் அமைப்புகள், பெரிய மனிதர்கள் என அனைத்து தரப்பினரும் தனிப்பட்ட முறையிலோ கூட்டாகவோ செய்தாக வேண்டும்.

குறைந்தபட்சம், நம் வீட்டு மழைநீர் சேகரிப்பு தொட்டியையேனும் சீர் செய்ய வேண்டும். நீரை சேமிக்க என்று மட்டும் இல்லாமல், மாசடைந்து உள்ள நமது நிலத்தடி நீருக்கு உயிரூட்டவும் மழை நீர் தேவைபடுகிறது!

ஊராட்சி அமைப்புகள் வரதராஜன் போன்ற மழைநீர் வல்லுனர்களை கொண்டு வீடுகளில் மழைநீர் சேகரிப்பை குறைந்த செலவில் அதிக நீரை சேமிக்கும்படி ஆலோசனை பெற்று நிறைவேற்றவேண்டும். நீர்நிலைகள் தூர்வாரி சீர்செய்ய தானம் அமைப்பு திரு வாசிமலை, வானகம் நம்மாழ்வார் போன்றோரின் ஆலோசனை / துணையோடு மேற்கொள்ளலாம். பெரும் பண்ணையாளர்கள் கூட்டாகவோ, தனியாகவோ, தங்கள் நிலங்களில் ஏரி, குளம் வெட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் நீர் தற்சார்பு நிலை விரைவில் உருவாகும். ஊர்களிலும், கோவில்களிலும் பலனற்று கிடக்கும் கிணறுகளை மழை நீர் சேமிக்க பயன்படுத்த வேண்டும்..!

பசுமை அமைப்புக்களும், பத்திரிக்கைகளும் இதை மக்களிடம் எடுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பலரையும் செயலில் இறங்க தூண்ட வேண்டும்.

எத்தனையோ பேருக்கு கான்சர் உட்பட கொடிய நோய்கள தந்து பல ஆயிரம் பேரை சத்தமின்றி காவு வாங்கி கொண்டிருக்கும் சாய-தோல் ஆலை அதிபர்கள் தான் முதலில் இந்த விசயத்தில் இறங்கி தங்கள் பாவங்களுக்கு சிறிதேனும் விமோசனம் தேடிக்கொள்ள வேண்டும்.

மழைநீர் முறையாக செமிக்கபட்டால் ஆற்று நீரை நாம் எதிர்பார்க்க தேவை இல்லை! வெறும் 2 மி.மீ. மழை அளவுள்ள இஸ்ரேல் விவசாயத்தில் சாதிக்கிறது. நம்மாலும் முடியும்..!



No comments:

Post a Comment