Tuesday 31 December 2013

நவீன படைப்பாளிகள்

முன்னோர்கள ஒரு படைப்பை வெளியிட PhD தீசிஸ் போல தர்க்க விவாதங்கள் வைத்து உண்மை-பொய்மை; பிழை திருத்தம் எல்லாம் பார்த்து சமூகத்துக்கு நல்லது என்று சமாதானம் ஏற்ப்பட்டால் ஒழிய இலக்கியம் வெளிவராது. அம்மாதிரி படைப்புகள் அறப்பிடிப்பும், அறிவுச்செழுமையும் ஏற்படுத்தும். ஆனால் இன்று முற்போக்கு (அ) படைப்பாளி (அ) நவீன இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்வோர் பலரின் புத்தகங்களை படித்தால் ஒரு அருவருப்பு தான் தோன்றுகிறது. சிந்தனையில் விஷம் கலப்பதே ஒரு சமூகத்தை சிதறடிக்கும் முதல் படி என்ற கோட்பாட்டின் படி வெளிநாட்டு கூலிக்கு மாரடிப்பவர்கள் போலும். (http://www.jeyamohan.in/?p=28449). கேட்டால் எழுத்துரிமை கருத்துரிமை என்பார்கள். பேனாவில் இன்க் இருந்தால் இலக்கியவாதி; பிரிண்டர் இருந்தால் படைப்பாளி.. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல..! இவர்கள் எல்லாம் இலக்கியவாதி என்று சொல்லிக்கொள்வது அந்த வார்த்தைக்கு ஏற்ப்படுத்தும் அசிங்கம். என்னை கேட்டால் மஞ்சள் பத்திரிகை எழுத்தாளர்களும் இனி தங்களை முற்போக்கு சிந்தனையாளர், நவீன இலக்கியவாதி என்று சொல்லிக்கொள்ள தகுதியுடையவர்களே..

இப்படியான சூழலில் ஜோடீ க்ரூஸ் போன்றவர்கள் நம்பிக்கை நட்சத்திரம்தான். அவருக்கு சாகித்ய அகாடமி கொடுத்தது மூலம் தங்கள் நேர்மைக்கான ஒரு வாதத்தை தயார் செய்துகொண்டது சாகித்ய அகாடமி.

No comments:

Post a Comment